Thể thao trong tiếng Tamil
Thể thao: đội bóng, trận đấu, tập luyện và từ ngữ của môn chơi. Đọc và nghe tiếng Tamil theo trình độ của bạn, từ Mới bắt đầu đến Thành thạo, có âm thanh, bản dịch và bài kiểm tra.
Bài học tiếng Tamil về Thể thao
Tin tức
Xem tất cả 2
Thể thaoCao cấpஅடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.சாம் சி.எஸ். 100:இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.ரிலீஸ் அப்டேட்:முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
Thể thaoSơ cấpஒரிஜினல் மான்ஸ்டர்: பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய் திரையுலகை தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளர் திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.மோஷன் போஸ்டர் வெளியீடு:மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்றவர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளை கொண்ட சிறப்பான படைப்பு குழுவையும் எடுத்துக்காட்டியது.சிறப்பான வரவேற்பு:மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகை சேர்ந்தவர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது.தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பர பயணத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Truyện
Xem tất cả 120Hội thoại
Xem tất cả 120Bài nói ngắn
Xem tất cả 120Podcast
Xem tất cả 3Thể thao
பள்ளி விளையாட்டு அணியில் சேருவது
கார்த்திக்கின் கிரிக்கெட் அனுபவமும், திவ்யாவின் வளைதடிப் பந்தாட்ட அனுபவமும் பற்றிய உரையாடல். பயம், தோல்வி, வெற்றி மற்றும் குழுப்பணி பற்றி எளிமையான தமிழில் பேசுகிறார்கள்.
Thể thao
அழகான விளையாட்டு: கலாச்சார நிகழ்வாக கால்பந்து
கார்த்திக்கும் திவ்யாவும் கால்பந்தின் உலகளாவிய கலாச்சாரப் பிடிப்பை ஆராய்கின்றனர். டர்கீமின் கூட்டு உணர்ச்சி கோட்பாடு, ரசிகர் குழுக்களின் பரிணாமம், மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவை இந்த விளையாட்டின் அடித்தட்டு மக்களின் ஆன்மாவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இவர்கள் விவாதிக்கிறார்கள்.
Thể thao
குடும்பத்துடன் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பது
கார்த்திக்கையும் திவ்யாவும் கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை குடும்பத்துடன் பார்க்கும் தங்கள் பழக்கங்களைப் பற்றி பேசுகிறார்கள். விளையாட்டு வீரர்கள், மறக்க முடியாத தருணங்கள் பற்றிய ஒரு நட்பான உரையாடல்.


