Cảm hứng & hài hước trong tiếng Tamil
Cảm hứng và hài hước: những câu chuyện nâng đỡ tinh thần hoặc khiến bạn bật cười. Đọc và nghe tiếng Tamil theo trình độ của bạn, từ Mới bắt đầu đến Thành thạo, có âm thanh, bản dịch và bài kiểm tra.
Bài học tiếng Tamil về Cảm hứng & hài hước
Tin tức
Xem tất cả 2
Cảm hứng & hài hướcTrung cấpதூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி: அமைச்சா் ராஜ்மோகன் அறிவிப்பு
தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி வழங்கப்படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வி அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்துள்ளாா். சென்னையில் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளா்கள் போராடி வருவது தொடா்பாகவும், முதல்வரைச் சந்திக்கவிடாமல் சில அதிகாரிகள் அவா்களைத் தடுத்து வருவதாகவும் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன் கொண்டுவந்த கவன ஈா்ப்பு தீா்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்காக 93 இடங்களில் உடைகள் மாற்றும் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 107 இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் செப். 15-க்குள் அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும், தேவைப்படக்கூடிய உபகரணங்கள், தினமும் ஒரு முகக்கவசம் என்ற வகையில் கிட்டத்தட்ட 10.69 லட்சம் முகக்கவசங்களும், மாதிரி கையுறைகள் 15 நாள்களுக்கு 2 ஜோடி என்ற அடிப்படையில் 1,18,899 கையுறைகளும், மண்டலங்கள் 4, 7, 8-இல் பணியாற்றும் பணியாளா்களுக்கு வழங்கப்படும். இது இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கப்படும். காலை உணவுக்குப் பதில் உரிய தொகையைத் தரும்படி தூய்மைப் பணியாளா்கள் கேட்டுக்கொண்டதால், உணவுக்குப் பதிலாக உணவுப் படி வழங்குவது தொடா்பான ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் ரூ.762 ஊதியமாக இருந்தது. அதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த ஊதியம் ரூ.832 என மாற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. அத்தொகையை வழங்க மறுபரிசீலனை செய்யப்படும். தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் தொடா்பாகப் போராடுகிறாா்கள்; ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு, ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளனா். மேலும், முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்கின்றனா். துறை சாா்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசி இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா்.
Cảm hứng & hài hướcTrung cấpசிவில் என்ஜினீயராகி சாதனை படைத்த நக்சலைட்டு மகள்..!
மும்பை,நக்சலைட்டு தந்தைமராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் போகாபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அரவிந்தா (வயது 20). இவரது தந்தை ராஜ்பாபு பர்சாகடே, கடந்த 2005-ம் ஆண்டு சில காரணங்களால் தனது பஞ்சாயத்து வேலையை விட்டுவிட்டு நக்சலைட்டு அமைப்பில் சேர்ந்தார். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள்.அரவிந்தாவின் தாய் லதா, தனது கணவரை தேடி குழந்தையுடன் காடுகளுக்குள் அலைந்துள்ளார். பல இன்னல்களுக்கு பிறகு, கடந்த 2010-ம் ஆண்டு ராஜ்பாபு பர்சாகடே போலீசில் சரணடைந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார்.மகள் என்ஜினீயர் ஆனார்சாலை வசதி, மின்சார வசதி கூட இல்லாத கிராமத்தில் வசித்து வந்த அரவிந்தா, தனது தாயின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தார். வறுமை வாட்டிய போதும் விடாமுயற்சியுடன் படித்து, கடந்த ஆண்டு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை முடித்தார். தற்போது அவர் 'லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி' நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயராக பணியில் சேர்ந்துள்ளார்.இதுகுறித்து அரவிந்தா கூறும்போது, "என் தாய் பட்ட கஷ்டங் களுக்கு என்னால் பலன் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. இந்த வேலை இத்துடன் முடிவதல்ல, வேலை பார்த் துக்கொண்டே அடுத்து பி.டெக் படிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்றார். நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி, கடந்த மார்ச் மாதம்தான் நக்சலைட்டுகள் இல்லாத மாவட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Truyện
Xem tất cả 120Hội thoại
Xem tất cả 120Bài nói ngắn
Xem tất cả 120Podcast
Xem tất cả 3Cảm hứng & hài hước
நாம் ஏன் சிரிக்கிறோம்? உலகெங்கும் நகைச்சுவை
கார்த்திக் மற்றும் திவ்யா வெவ்வேறு கலாச்சாரங்களில் நகைச்சுவை எப்படி மாறுகிறது என்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஆச்சரியம், சரியான நேரம், மற்றும் உடல் நகைச்சுவை எல்லா இடங்களிலும் மனிதர்களை இணைக்கின்றன என்பதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.
Cảm hứng & hài hước
ஆயிரம் 'வேண்டாம்'களிலிருந்து உலகளாவிய வெற்றி வரை
கார்த்திக் மற்றும் திவ்யா, ஹார்லண்ட் சாண்டர்ஸின் உண்மையான கதையைச் சொல்கிறார்கள். அவர் அறுபத்தி ஐந்து வயதில் தன் உணவகத்தை இழந்தார், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறுப்புகளை எதிர்கொண்டு, அவர் ஒரு உலகளாவிய வணிகத்தை உருவாக்கினார். மீண்டும் தொடங்குவதற்கு ஒருபோதும் தாமதமாகாது என்பதை இது நிரூபிக்கிறது.
Cảm hứng & hài hước
பேரழிவுக்குப் பிறகு வருவது என்ன?
கார்த்திக்க் ராமனும் திவ்யா சங்கரும், ஒரு பெரிய தவறுக்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்கிறார்கள். நிறுவன நெருக்கடிகள், அவமானம் குறித்த ஆய்வுகள், மற்றும் ஒரு தர்மசங்கடமான மின்னஞ்சல் கதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சுய இரக்கம், நேர்மையான பொறுப்பேற்பு, மற்றும் சில விஷயங்களை மீட்டமைக்க முடியாது, மாறாக வேறுவிதமாக மட்டுமே கட்டமைக்க முடியும் என்பதையும் இவர்கள் விவாதிக்கிறார்கள்.
Video
Xem tất cả 10
Thành thạo32:05Kuraishi Sing in The Rain , #samvishal #Bharathkrajesh #kumudhini #prasanna | The Musical Game show
Media Masons
Trung cấp8:04💥🤯Malaysia ChestNut | Aarif's MindVoice..⁉️💢 #shorts #malaysia #aarifmindvoice
Aarif's MindVoice
Mới bắt đầu4:16Best Chocolate Muffin Recipe in Tamil | Bakery Style Muffin Recipe in Tamil
Madras Samayal