Ana Sayfa/Detail

Tamilce: Seyahat

Seyahat: geziler, yerler, ulaşım ve yolda ihtiyaç duyacağın kalıplar. Başlangıç - Ustalık aralığında, seviyene uygun Tamilce oku ve dinle; ses, çeviri ve quizlerle.

Seyahat hakkında Tamilce dersleri

SeyahatOrta
Daily Thanthi1 Eyl

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மழை..! வானிலை மையம் அப்டேட்

சென்னை, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (02.09.2026) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழைஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (01-09-2026) மற்றும் நாளை (02-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் (03-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.04-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.05-09-2026 மற்றும் 06-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:இன்று (01-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வங்கக்கடல் பகுதிகள்:01-09-2026 மற்றும் 02-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.03-09-2026 மற்றும் 04-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.அரபிக்கடல் பகுதிகள் :01-09-2026: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.02-09-2026 முதல் 04-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SeyahatOrta
Thanthi TV1 Eyl

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2026) | 6 AM Headlines | Thanthi TV

கிர்கிஸ்தானில் PM மோடி - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்புஅமைதிக்கு இந்தியா ஆதரவளிக்கும் - பிரதமர் மோடிஜிடிபி 7.8%ஆக உயர்வு - பிரதமர் மோடி பெருமிதம்ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரிப்பு - புதின்இன்று மேட்டூர் அணையில் நீர் திறந்து வைக்கிறார் CM விஜய்முதல்வர் வருகை - மேட்டூரில் ஏற்பாடுகள் தீவிரம்நேபாள வெள்ளம் - ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை நேபாள வெள்ளம் - 158 இந்தியர்கள் மீட்புநேபாளத்தில் மீட்கப்பட்ட 29 தமிழர்கள் டெல்லி வருகை"நேபாள் துயரம் - மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது"சிந்து நதி நீர் ஒப்பந்தம் - இந்தியா திட்டவட்டம் நாசிக்கில் இருந்து ரயிலில் சென்னை வந்த 840 டன் வெங்காயம்

SeyahatÜst Orta
Daily Thanthi1 Eyl

பெண்கள் ஆசிய கோப்பை - இந்தோனேசியாவை சுருட்டிய வங்காளதேசம்... 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

துபாய்,பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. பெண்கள் ஆசிய கோப்பைபெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.டாஸ்இதற்கிடையில், இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம், இந்தோனேசியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தோனேசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.129 ரன்கள்இதையடுத்து, களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபனா மோஸ்தரி அதிகபட்சமாக 40(42) ரன்கள் எடுத்தார். 58 ரன்கள் தொடர்ந்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தோனேசியா, வங்காளதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 17.3 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் வங்காளதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Ustalık23:20

Seyahat

நாம் ஏன் பயணிக்கிறோம்: பழங்கால யாத்திரையிலிருந்து இன்றைய குறுவீடியோ பயணத் திட்டம் வரை

எந்த நடைமுறைக் காரணமும் இல்லாமல் மனிதர்கள் வீட்டை விட்டு வெளியேறி குறைந்தது ஆறு நூற்றாண்டுகள் ஆகின்றன, ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு ஒரு புதிய காரணத்தைச் சொல்லிக்கொள்கிறது. கார்த்திக்கும் திவ்யாவும் இந்த ஓயாத உந்துதலைப் பழங்கால யாத்திரைகளிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டின் 'கிராண்ட் டூர்' வழியாக, இன்றைய பதினைந்து விநாடி சமூக வலைதளப் பயணத் திட்டங்கள் வரை தடம் பின்தொடர்கிறார்கள். பயண ஆர்வம் என்பது ஒரு பசி, அந்தஸ்துப் போட்டி, மரபணு விசித்திரமா, அல்லது நம்மை நாமே தவிர்ப்பதற்கான மிக நுட்பமான வழியா என்று இருவரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Dinle ve Çalış
Temel16:30

Seyahat

பயணத்தில் புதிய உணவுகளை முயற்சித்தல்

கார்த்திக் தனது சமீபத்திய தாய்லாந்து பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். தெரு உணவுகள் அவரை எப்படி ஆச்சரியப்படுத்தின என்பதையும், புதிய உணவுகளை ருசிப்பதில் உள்ள மகிழ்ச்சியையும் பயத்தையும் பற்றி திவ்யாவுடன் உரையாடுகிறார்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Dinle ve Çalış
Temel16:30

Seyahat

ரயிலில் ஒரு விடுமுறைப் பயணம்

கடந்த கோடையில் லக்ஷ்மி சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்திற்குப் பதிலாக ரயிலில் பயணம் செய்தார். அவரும் கார்த்திக்கும் டிக்கெட்டுகள், இருக்கைகள், இரவு ரயில்கள் மற்றும் கடலோர மெதுவான பயணம் ஏன் விடுமுறையின் சிறந்த பகுதியாக இருந்தது என்பதைப் பற்றி பேசுகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Dinle ve Çalış

Seviyeye göre Tamilce Seyahat

Diğer Tamilce konuları

Seyahat ile Tamilce öğrenmek hakkında sorular

Neden Tamilce dilini Seyahat üzerinden öğrenmeliyim?
İlgini çeken içerik dikkatini canlı tutar ve aynı kelimeler farklı derslerde geri gelir. Kelimelerin akılda kalmasını sağlayan şey bu tekrardır.
Tamilce Seyahat için hangi seviyeyi seçmeliyim?
On kelimeden dokuzunu anladığın seviyeyi seç. Her konuda Başlangıç - Ustalık aralığında dersler var, böylece kolaydan başlayıp yükselebilirsin.
Bu Tamilce içerik ücretsiz mi?
Evet. Öğrenmek ücretsiz; ses, çeviri ve quizlerle. Premium sınırsız pratik ve dışa aktarma gibi ekstralar sunar.