Ana Sayfa/Detail

Tamilce: Eğitim

Eğitim: okul, çalışma ve öğrenme; sınıflardan ömür boyu merakına. Başlangıç - Ustalık aralığında, seviyene uygun Tamilce oku ve dinle; ses, çeviri ve quizlerle.

Eğitim hakkında Tamilce dersleri

EğitimUstalık
Maalai Malar1 Eyl

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2026: ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் பவனி

இன்றைய பஞ்சாங்கம்பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)பிறை : தேய்பிறைதிதி : சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமிநட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணியோகம் : சித்தயோகம் ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரைஎமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரைசூலம் : வடக்குநல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. இன்றைய ராசிபலன்மேஷம் - ஆர்வம்ரிஷபம் - தேர்ச்சிமிதுனம் - வரவுகடகம் - உழைப்புசிம்மம் - முயற்சிகன்னி - ஜெயம் துலாம் - போட்டிவிருச்சிகம் - ஆக்கம்தனுசு - அனுகூலம்மகரம் - நன்மைகும்பம் - மேன்மைமீனம் - கடமை

Eğitimİleri
Maalai Malar1 Eyl

அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்

அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வெள்ளை மாளிகை அறிக்கை:"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்."முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.ராணுவ அதிகாரி தகவல்:பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.

Başlangıç14:21

Eğitim

இந்த வாரத்திற்கான என் படிப்பு திட்டம்

கார்த்திக் மற்றும் திவ்யா தங்கள் வாராந்திர படிப்பு திட்டம் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படி வீட்டுப்பாடம் செய்கிறார்கள், சொற்களை மீண்டும் படிக்கிறார்கள், தமிழ் பயிற்சி செய்கிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Dinle ve Çalış
Orta21:27

Eğitim

ஆன்லைன் கற்றல் எதிர் பாரம்பரிய வகுப்பறை

கார்த்திக் மற்றும் திவ்யா ஆன்லைனில் படிப்பதையும் நேரடி வகுப்பறையில் கற்பதையும் ஒப்பிடுகிறார்கள். தொற்றுநோய் காலத்திலும் அதற்குப் பிறகும் அவர்கள் பெற்ற அனுபவங்களை வைத்து, நெகிழ்வுத்தன்மை, சுயஒழுக்கம், சமூகத் தொடர்பு மற்றும் எந்த முறை உண்மையில் மக்களுக்கு சிறப்பாகக் கற்க உதவுகிறது என்பதை ஆராய்கிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Dinle ve Çalış
Temel18:45

Eğitim

பெரியவர்களாக ஒரு புதிய மொழியைக் கற்பது

கார்த்திக்க் மற்றும் திவ்யா பெரியவர்களாக இருக்கும்போது ஒரு புதிய மொழியைக் கற்கத் தொடங்குவதைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் சிரமங்கள், வேடிக்கையான தவறுகள் மற்றும் முன்னேற உதவிய எளிய முறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Dinle ve Çalış

Seviyeye göre Tamilce Eğitim

Diğer Tamilce konuları

Eğitim ile Tamilce öğrenmek hakkında sorular

Neden Tamilce dilini Eğitim üzerinden öğrenmeliyim?
İlgini çeken içerik dikkatini canlı tutar ve aynı kelimeler farklı derslerde geri gelir. Kelimelerin akılda kalmasını sağlayan şey bu tekrardır.
Tamilce Eğitim için hangi seviyeyi seçmeliyim?
On kelimeden dokuzunu anladığın seviyeyi seç. Her konuda Başlangıç - Ustalık aralığında dersler var, böylece kolaydan başlayıp yükselebilirsin.
Bu Tamilce içerik ücretsiz mi?
Evet. Öğrenmek ücretsiz; ses, çeviri ve quizlerle. Premium sınırsız pratik ve dışa aktarma gibi ekstralar sunar.