Home/Detail

Negosyo at karera sa Tamil

Negosyo at karera: trabaho, interview, pera at ang wika ng opisina. Magbasa at making sa Tamil ayon sa antas mo, mula Baguhan hanggang Bihag, may audio, salin at mga quiz.

Mga aralin sa Tamil tungkol sa Negosyo at karera

Negosyo at kareraBihag
Daily ThanthiSet 1

150 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்

"ஒரு மனிதனுக்கு ஒரு மீனை கொடுத்தால் அன்று மட்டும் அவனை சாப்பிட வைத்து பசியாற செய்துவிடுவீர்கள். ஆனால் அதற்கு பதிலாக மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தீர்கள் என்றால், அவனுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவளித்துவிடுவீர்கள்" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.தமிழக அரசுஇது ஒருபக்கம் தேவைப்படுபவர்களுக்கு செய்யும் உதவி என்றாலும், அதை அவர்கள் கையேந்தி வாங்காமல் தன்னம்பிக்கையுடன் உழைத்து சம்பாதிக்க காட்டும் வழியாகும். இதைத்தான் இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமைதான். ஆனால் அதை உதவியாக செய்யாமல், அவர்களே உழைத்து சம்பாதித்துக்கொள்ள நல்ல வழி இப்போது காட்டப்பட்டுள்ளது.125 நாட்கள் வேலை திட்டம்2004-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார். விவசாய வேலை இல்லாத நேரங்களில் இந்த 100 நாட்கள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு கைகொடுத்தது. இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்கள் வேலை திட்டமாக மாற்றியுள்ளது.வெற்றி 150இந்த நிலையில் தமிழக அரசு மேலும் ஒருபடி சென்று, கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 'வெற்றி 150' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி 125 நாட்கள் வேலைவாய்ப்பை நிறைவு செய்த குடும்பங்களுக்கு மேலும் 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்த கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.4 மணி நேரம்இதன்மூலம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்போடு, தமிழக அரசின் முயற்சியால் மேலும் 25 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை வழங்கியுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடங்களிலேயே 8 மணி நேரம் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் மற்ற தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு ஈடாக செய்யவேண்டியதில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடத்தில் 4 மணி நேரம் இருந்தால் போதும். அவர்களுக்கு மிக எளிதான வேலையே கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற எளிதான வேலையே வழங்கப்படும்.1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள்மற்றவர்கள் செய்யும் வேலையில் 50 சதவீத வேலையே அவர்கள் செய்யவேண்டும் என்றாலும் அவர்களுக்கு முழு சம்பளமான ரூ.336 கொடுக்கப்படும். தமிழ்நாட்டில் இப்போது இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற 1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்க விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் பணி அட்டை வழங்கப்படவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நாம் யாரையும் சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. உழைத்து சம்பாதிக்கிறோம் என்ற கவுரவத்தையும், பெருமையையும் இந்த உத்தரவு வழங்கியுள்ளது.

Negosyo at kareraBaguhan
DinamaniSet 1

மீண்டும் சொத்து வரி ஆய்வு: அமைச்சா் நிா்மல் குமாா் உறுதி

மாநகராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொத்து வரி ஆய்வு திருத்தி அமைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேரவையில் பேசினாா். இதற்குப் பதிலளித்த அமைச்சா் நிா்மல் குமாா், ‘மதுரை மாநகராட்சியில் 60,000 வா்த்தகக் கட்டடங்களின் வரி தவறாக நிா்ணயம் செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டு ஊழல் நடந்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநகராட்சிகளில் குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்து விரைவில் சொத்து வரி தொடா்பாக மீண்டும் ஆய்வு நடத்தப்படும்’ என்றாா். அப்போது பேசிய எதிா்க்கட்சி துணைத் தலைவா் கே.என். நேரு, ‘மாநகராட்சிகளில் கடந்த 18 ஆண்டுகளாக வரி சீரமைப்பு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் மீது முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியும் அதிகாரமும் உள்ள தவெக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம்’ என்றாா். ஒத்துழைப்பது இல்லை: பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசுகையில், ‘மாநகராட்சிகள் அரசுடன் சோ்ந்து செயல்படுவதில்லை. அடுத்த 6-7 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தலில் 25 மாநகராட்சிகளில் தவெக 100 சதவீத வெற்றி பெறும்’ என்றாா். இதற்குப் பதிலளித்த கே.என். நேரு, ‘புதிய திட்டங்களுக்கு தமிழக அரசு பணம் தராததால் மாநகராட்சிகள் ஸ்தம்பித்துள்ளன. கவுன்சிலா்கள், மேயா்கள் ஒத்துழைப்பு தராமல் திட்டங்களை நிறுத்தினால் மாநகராட்சி ஆணையருக்கு அவற்றைச் செயல்படுத்த அதிகாரம் உள்ளது’ என்றாா். நடவடிக்கை தேவை: முன்னதாகப் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவா் தாரகை கத்பட், சேலம் மாநகராட்சியில் துணை மேயருக்கான இருக்கையை திட்டமிட்டு வேறு இடத்துக்கு மாற்றிய மேயா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

Negosyo at kareraElementarya
Daily ThanthiAgo 31

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு இன்று முதல் அமல்

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரானது ஆண்டாள் பிறந்த பூமி ஆகும். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.கிலோவுக்கு ரூ.40 வரை உயர்வுஅதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Katamtaman22:25

Negosyo at karera

ஃப்ரீலான்ஸ் வேலை vs முழுநேர வேலை

கார்த்திக்கின் நண்பர் சுரேஷ் பல ஆண்டுகளாக ஃப்ரீலான்சராக வேலை செய்கிறார். கார்த்திக் எப்போதும் முழுநேர வேலையில் இருந்தவர். அவரும் திவ்யாவும் ஃப்ரீலான்ஸ் வேலையின் சுதந்திரத்தையும் நிச்சயமற்ற தன்மையையும், வழக்கமான சம்பளத்தின் நிலைப்புத்தன்மையையும் ஒப்பிடுகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Makinig at Mag-aral
Mas mataas na katamtaman22:08

Negosyo at karera

வேலையில் ஏற்படும் மன அழுத்தம்

கார்த்திக் தனது கடைசி ஆசிரியர் பணியின் போது ஏற்பட்ட மன அழுத்தம் பற்றி பேசுகிறார். அவரும் திவ்யாவும் மன அழுத்தத்தின் எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் பணியிடங்கள் அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Makinig at Mag-aral
Elementarya16:28

Negosyo at karera

வீட்டில் இருந்து வேலை

கார்த்திக்கும் திவ்யாவும் வீட்டில் இருந்து வேலை செய்த தங்கள் அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். வீட்டு வேலையின் நல்ல பக்கமும் கெட்ட பக்கமும் சுலபமான உதாரணங்களுடன் ஒப்பிடுகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Makinig at Mag-aral

Negosyo at karera sa Tamil ayon sa antas

Iba pang paksa sa Tamil

Mga tanong tungkol sa pag-aaral ng Tamil gamit ang Negosyo at karera

Bakit mag-aaral ng Tamil sa pamamagitan ng Negosyo at karera?
Nakakaakit ng atensyon mo ang content na pinapahalagahan mo, at bumabalik ang parehong mga salita sa iba't ibang aralin. Ang pag-uulit na iyon ang nagpapatatak ng bokabularyo.
Anong antas ang dapat kong piliin para sa Negosyo at karera sa Tamil?
Piliin ang antas kung saan naiintindihan mo ang siyam sa bawat sampung salita. May mga aralin ang bawat paksa mula Baguhan hanggang Bihag, kaya makakapagsimula ka sa madali at aakyat.
Libre ba ang content na ito sa Tamil?
Oo. Libre ang pag-aaral, may audio, salin at mga quiz. Nagdaragdag ang Premium ng mga extra tulad ng walang limitasyong practice at export.