Real news. Living language.
Explore daily news stories adapted to help you build reading and listening vocabulary.
Vzdelávanie a školaC2Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2026: ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் பவனி
இன்றைய பஞ்சாங்கம்பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)பிறை : தேய்பிறைதிதி : சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமிநட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணியோகம் : சித்தயோகம் ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரைஎமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரைசூலம் : வடக்குநல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. இன்றைய ராசிபலன்மேஷம் - ஆர்வம்ரிஷபம் - தேர்ச்சிமிதுனம் - வரவுகடகம் - உழைப்புசிம்மம் - முயற்சிகன்னி - ஜெயம் துலாம் - போட்டிவிருச்சிகம் - ஆக்கம்தனுசு - அனுகூலம்மகரம் - நன்மைகும்பம் - மேன்மைமீனம் - கடமை
ŠportC1அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.சாம் சி.எஸ். 100:இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.ரிலீஸ் அப்டேட்:முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
ŽivotB1ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி
புதுடெல்லி,ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டி20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.பவானி தேவிஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.20 வீரர், வீராங்கனைகள் தேர்வுஇந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இன்று பயிற்சி முகாம்ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
Priateľstvo a vzťahyA1வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை,சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் வழக்குதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மற்றொரு வழக்கையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார்.வாக்குப்பதிவில் முறைகேடுதேர்தல் வழக்கு மனுவில், "கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில், சரிபார்ப்புக்காக சில எந்திரங்கள் எடுக்கப்பட்டன. அதில் சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான வி.வி.பேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.தீர்ப்பு தள்ளிவைப்புஇந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளோம். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டது.எனவே, காலதாமதமாக தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை” என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேஷாத்திரி நாயுடு, "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.திரும்ப பெற அனுமதிஅதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வழிகாட்டு நெறிமுறைகளில் புதிதாக கடந்த 2025-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர்.
Cestovanie a dobrodružstvoB1சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மழை..! வானிலை மையம் அப்டேட்
சென்னை, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (02.09.2026) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழைஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (01-09-2026) மற்றும் நாளை (02-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் (03-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.04-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.05-09-2026 மற்றும் 06-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:இன்று (01-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வங்கக்கடல் பகுதிகள்:01-09-2026 மற்றும் 02-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.03-09-2026 மற்றும் 04-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.அரபிக்கடல் பகுதிகள் :01-09-2026: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.02-09-2026 முதல் 04-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ZdravieA2இன்றைய ராசி பலன்கள் (01.9.2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.
Fantasy a nadprirodzenoA1இன்றைய ராசி பலன்கள் (செப். 01) - மிதுன ராசிக்கு மகிழ்ச்சி!
இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.
Vzdelávanie a školaC1அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்
அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வெள்ளை மாளிகை அறிக்கை:"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்."முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.ராணுவ அதிகாரி தகவல்:பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.
Cestovanie a dobrodružstvoB1Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2026) | 6 AM Headlines | Thanthi TV
கிர்கிஸ்தானில் PM மோடி - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்புஅமைதிக்கு இந்தியா ஆதரவளிக்கும் - பிரதமர் மோடிஜிடிபி 7.8%ஆக உயர்வு - பிரதமர் மோடி பெருமிதம்ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரிப்பு - புதின்இன்று மேட்டூர் அணையில் நீர் திறந்து வைக்கிறார் CM விஜய்முதல்வர் வருகை - மேட்டூரில் ஏற்பாடுகள் தீவிரம்நேபாள வெள்ளம் - ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை நேபாள வெள்ளம் - 158 இந்தியர்கள் மீட்புநேபாளத்தில் மீட்கப்பட்ட 29 தமிழர்கள் டெல்லி வருகை"நேபாள் துயரம் - மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது"சிந்து நதி நீர் ஒப்பந்தம் - இந்தியா திட்டவட்டம் நாசிக்கில் இருந்து ரயிலில் சென்னை வந்த 840 டன் வெங்காயம்
ஏழரை 01.09.2026
Cestovanie a dobrodružstvoB2பெண்கள் ஆசிய கோப்பை - இந்தோனேசியாவை சுருட்டிய வங்காளதேசம்... 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
துபாய்,பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. பெண்கள் ஆசிய கோப்பைபெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.டாஸ்இதற்கிடையில், இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம், இந்தோனேசியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தோனேசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.129 ரன்கள்இதையடுத்து, களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபனா மோஸ்தரி அதிகபட்சமாக 40(42) ரன்கள் எடுத்தார். 58 ரன்கள் தொடர்ந்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தோனேசியா, வங்காளதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 17.3 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் வங்காளதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Biznis a kariéraC2150 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்
"ஒரு மனிதனுக்கு ஒரு மீனை கொடுத்தால் அன்று மட்டும் அவனை சாப்பிட வைத்து பசியாற செய்துவிடுவீர்கள். ஆனால் அதற்கு பதிலாக மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தீர்கள் என்றால், அவனுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவளித்துவிடுவீர்கள்" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.தமிழக அரசுஇது ஒருபக்கம் தேவைப்படுபவர்களுக்கு செய்யும் உதவி என்றாலும், அதை அவர்கள் கையேந்தி வாங்காமல் தன்னம்பிக்கையுடன் உழைத்து சம்பாதிக்க காட்டும் வழியாகும். இதைத்தான் இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமைதான். ஆனால் அதை உதவியாக செய்யாமல், அவர்களே உழைத்து சம்பாதித்துக்கொள்ள நல்ல வழி இப்போது காட்டப்பட்டுள்ளது.125 நாட்கள் வேலை திட்டம்2004-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார். விவசாய வேலை இல்லாத நேரங்களில் இந்த 100 நாட்கள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு கைகொடுத்தது. இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்கள் வேலை திட்டமாக மாற்றியுள்ளது.வெற்றி 150இந்த நிலையில் தமிழக அரசு மேலும் ஒருபடி சென்று, கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 'வெற்றி 150' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி 125 நாட்கள் வேலைவாய்ப்பை நிறைவு செய்த குடும்பங்களுக்கு மேலும் 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்த கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.4 மணி நேரம்இதன்மூலம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்போடு, தமிழக அரசின் முயற்சியால் மேலும் 25 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை வழங்கியுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடங்களிலேயே 8 மணி நேரம் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் மற்ற தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு ஈடாக செய்யவேண்டியதில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடத்தில் 4 மணி நேரம் இருந்தால் போதும். அவர்களுக்கு மிக எளிதான வேலையே கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற எளிதான வேலையே வழங்கப்படும்.1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள்மற்றவர்கள் செய்யும் வேலையில் 50 சதவீத வேலையே அவர்கள் செய்யவேண்டும் என்றாலும் அவர்களுக்கு முழு சம்பளமான ரூ.336 கொடுக்கப்படும். தமிழ்நாட்டில் இப்போது இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற 1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்க விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் பணி அட்டை வழங்கப்படவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நாம் யாரையும் சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. உழைத்து சம்பாதிக்கிறோம் என்ற கவுரவத்தையும், பெருமையையும் இந்த உத்தரவு வழங்கியுள்ளது.
ஆர்ஜென்டீனா அணியிலிருந்து மெஸ்ஸி ஓய்வு
ஆர்ஜென்டீனா கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (39) திங்கள்கிழமை அறிவித்தார். சர்வதேச கால்பந்து களத்திலிருந்து விடைபெற்றிருக்கும் அவர், கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிகிறது. டியேகோ மாரடோனாவுக்கு பிறகு சர்வதேச களத்தில் ஆர்ஜென்டீனாவின் கால்பந்து கதாநாயகனாக மிளிர்ந்த மெஸ்ஸி, சுமார் 20 ஆண்டுகள் தேசிய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஆர்ஜென்டீனாவுக்காக மெஸ்ஸி 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்க, அவர் தலைமையில் அந்த அணி 2022}இல் சாம்பியன் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடப்பாண்டு போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து, அதில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது. இந்நிலையில், ஓய்வு முடிவை அறிவித்து தனது ’இன்ஸ்டாகிராம்' சமூக வலைதள கணக்கில் மெஸ்ஸி வெளியிட்ட பதிவு: ”இது வலி தரக்கூடிய முடிவாக இருந்தாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரமாகும். கடந்த சில காலமாக பெற்ற வெற்றிகளின்போது மட்டும் அல்லாமல், அதற்கு முன்பாகவுமே ஆர்ஜென்டீனா அணிக்காக நான் முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடினேன் என்பதை உறுதியாகக் கூறுவேன். ஆர்ஜென்டீன குடிமக்களாக நீங்கள் பெருமை மற்றும் மகிழ்ச்சி கொள்வதற்காக, களத்தில் எப்போதும் நான் கடுமையாகப் போராடியதுடன், தேவையான அனைத்தையும் செய்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டி வந்த அன்புக்கு நன்றி. இனி உங்களில் ஒருவனாக இருந்து ஆர்ஜென்டீன அணிக்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்கப் போகிறேன். ஒரு காலத்தில் நாம் கனவாகக் கொண்டிருந்த தருணங்களை, எனது சக வீரர்களுடன் இணைந்து உங்களுக்கு நிஜமாக்கிக் கொடுத்த மன அமைதி மற்றும் பெருமையுடன் நான் விடைபெறுகிறேன். அந்த வெற்றிகளை உங்களோடு கண்டது அற்புதமானது” என்று அதில் மெஸ்ஸி கூறியுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டு 2 நாள்களுக்குப் பிறகு (ஜூலை 21) இந்த ஓய்வு முடிவு கடிதத்தை தாம் எழுதிவிட்டதாகவும், அப்போது தனது தந்தை உடல்நலக்குறைவுடன் இருந்ததால் முடிவை தாமதித்ததாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலமானார். சர்வதேச களத்திலிருந்து ஓய்வு பெற்ற மெஸ்ஸி, கிளப் போட்டிகளில் தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன், பார்சிலோனா எஃப்சி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.
மீண்டும் சொத்து வரி ஆய்வு: அமைச்சா் நிா்மல் குமாா் உறுதி
மாநகராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொத்து வரி ஆய்வு திருத்தி அமைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேரவையில் பேசினாா். இதற்குப் பதிலளித்த அமைச்சா் நிா்மல் குமாா், ‘மதுரை மாநகராட்சியில் 60,000 வா்த்தகக் கட்டடங்களின் வரி தவறாக நிா்ணயம் செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டு ஊழல் நடந்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநகராட்சிகளில் குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்து விரைவில் சொத்து வரி தொடா்பாக மீண்டும் ஆய்வு நடத்தப்படும்’ என்றாா். அப்போது பேசிய எதிா்க்கட்சி துணைத் தலைவா் கே.என். நேரு, ‘மாநகராட்சிகளில் கடந்த 18 ஆண்டுகளாக வரி சீரமைப்பு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் மீது முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியும் அதிகாரமும் உள்ள தவெக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம்’ என்றாா். ஒத்துழைப்பது இல்லை: பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசுகையில், ‘மாநகராட்சிகள் அரசுடன் சோ்ந்து செயல்படுவதில்லை. அடுத்த 6-7 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தலில் 25 மாநகராட்சிகளில் தவெக 100 சதவீத வெற்றி பெறும்’ என்றாா். இதற்குப் பதிலளித்த கே.என். நேரு, ‘புதிய திட்டங்களுக்கு தமிழக அரசு பணம் தராததால் மாநகராட்சிகள் ஸ்தம்பித்துள்ளன. கவுன்சிலா்கள், மேயா்கள் ஒத்துழைப்பு தராமல் திட்டங்களை நிறுத்தினால் மாநகராட்சி ஆணையருக்கு அவற்றைச் செயல்படுத்த அதிகாரம் உள்ளது’ என்றாா். நடவடிக்கை தேவை: முன்னதாகப் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவா் தாரகை கத்பட், சேலம் மாநகராட்சியில் துணை மேயருக்கான இருக்கையை திட்டமிட்டு வேறு இடத்துக்கு மாற்றிய மேயா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
Inšpirácia a humorB1தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி: அமைச்சா் ராஜ்மோகன் அறிவிப்பு
தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி வழங்கப்படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வி அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்துள்ளாா். சென்னையில் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளா்கள் போராடி வருவது தொடா்பாகவும், முதல்வரைச் சந்திக்கவிடாமல் சில அதிகாரிகள் அவா்களைத் தடுத்து வருவதாகவும் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன் கொண்டுவந்த கவன ஈா்ப்பு தீா்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்காக 93 இடங்களில் உடைகள் மாற்றும் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 107 இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் செப். 15-க்குள் அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும், தேவைப்படக்கூடிய உபகரணங்கள், தினமும் ஒரு முகக்கவசம் என்ற வகையில் கிட்டத்தட்ட 10.69 லட்சம் முகக்கவசங்களும், மாதிரி கையுறைகள் 15 நாள்களுக்கு 2 ஜோடி என்ற அடிப்படையில் 1,18,899 கையுறைகளும், மண்டலங்கள் 4, 7, 8-இல் பணியாற்றும் பணியாளா்களுக்கு வழங்கப்படும். இது இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கப்படும். காலை உணவுக்குப் பதில் உரிய தொகையைத் தரும்படி தூய்மைப் பணியாளா்கள் கேட்டுக்கொண்டதால், உணவுக்குப் பதிலாக உணவுப் படி வழங்குவது தொடா்பான ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் ரூ.762 ஊதியமாக இருந்தது. அதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த ஊதியம் ரூ.832 என மாற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. அத்தொகையை வழங்க மறுபரிசீலனை செய்யப்படும். தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் தொடா்பாகப் போராடுகிறாா்கள்; ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு, ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளனா். மேலும், முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்கின்றனா். துறை சாா்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசி இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா்.
முந்தைய ஆட்சிகள் மதுநோயாளிகளை உருவாக்கின: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
‘மதுவிலக்கை ஒரே கையொப்பத்தில் அமல்படுத்திவிடலாம்; ஆனால், முந்தைய ஆட்சிகள் தமிழகத்தில் மதுநோயாளிகளை அதிக அளவில் உருவாக்கியுள்ளதால் அவா்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன’ என்று பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா். பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டப்பேரவை குழுத் தலைவா் செளமியா அன்புமணி, ‘பெண்களிடம் சேமிப்பாக இருக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் டாஸ்மாக்கில் வசூலாகிறது. மதுபோதையால் சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனால் இளம் பெண்கள் கணவரை இழப்பது அதிகரித்து வருகிறது. பூரண மதுவிலக்கு எனக் கூறும் அரசுகள் அதை செய்வதில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘தமிழகத்தில் மணல் மற்றும் டாஸ்மாக்கில் அதிக ஊழல் நடந்தது. விளிம்புநிலை மக்கள் அதிகமாக உள்ள வடமண்டலத்தில் அதிக அளவில் மது விற்பனையாகிறது. ஒரே நாளில் கையொப்பமிட்டு மதுவிலக்கை ஏற்படுத்திவிடலாம். ஆனால், தமிழகத்தில் முந்தைய ஆட்சிகள் உருவாக்கிய அதிக அளவிலான மது நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை உருவாக்கவும், மதுகுறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், இளைஞா்களால் உருவாக்கப்பட்ட தவெக அரசு மதுவிலக்குக்கு தீா்வு காணும். முந்தைய ஆட்சியில் டாஸ்மாக்குக்கு மதுபானங்களை விநியோகிக்க 13 நிறுவனங்களுக்கு உரிமை வழங்கியதில் வெளிப்படைத் தன்மை இல்லை. ஆட்சியில் இருந்த திமுகவினருக்கே இந்த உரிமம் வழங்கியது ஆதாயம் தரும் செயல் என்பதால் இது ஊழலாகும். தவெக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் யாரும் மதுபான தொழிலில் ஈடுபடமாட்டாா்கள். ஊழல் குற்றச்சாட்டில் மதுபான ஆலைகளை மூட வேண்டும் என்றாா். திமுகவினரை குறிப்பிட்டு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு திமுகவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது பேசிய முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ‘திமுகவின் கொள்கை முழு மதுவிலக்காகும். திமுகவுக்கு அவப் பெயா் ஏற்படுத்த வேண்டி உண்மைக்குப் புறம்பான ஊழல் வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகு உண்மை நிரூபணமாகும்’ என்றாா். பெட்டிச் செய்தி... ‘மதுபாட்டிலுக்கு ரூ.10 வாங்கக் கூறியது திமுக’: அமைச்சா் பேச்சால் பேரவையில் அமளி டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5- ஆக இருந்ததை ரூ.10-ஆக அதிகரித்து வாங்கக் கூறியது திமுகவும், அதிகாரிகளும்தான் என ஊழியா்கள் தெரிவித்தனா் என்றாா் அமைச்சா் விக்னேஷ். சட்டப்பேரவையில் இதுதொடா்பான கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது, ரூ.10 என்பது ரூ.20-ஆக அதிகரித்துள்ளதை ஏன் தவெக அரசு தடுக்கவில்லை கே.என்.நேரு கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அமைச்சா் விக்னேஷ் ரூ.14,000 என்ற குறைவான ஊதியத்தை டாஸ்மாக் விற்பனையாளா்கள் பெறுகின்றனா். இதனால் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5-ஆக வாங்கப்பட்டு வந்ததை ரூ.10-ஆக உயா்த்த கூறியதே முந்தைய திமுக ஆட்சிதான் என ஊழியா்கள் கூறுகின்றனா். இதைச் சீரமைப்பது சாதாரணமான காரியம் அல்ல’ என்றாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.
Fantasy a nadprirodzenoC1நேபாள வெள்ளத்தில் சிக்காத 29 தமிழா்கள் தில்லி வந்தனா் சொந்த ஊா் திரும்ப தமிழக அரசு உதவி
நமது நிருபா்நேபாள பெருவெள்ளத்தில் சிக்காத தமிழகத்தைச் சோ்ந்த 29 பயணிகள் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். அவா்கள் தமிழகத்தில் உள்ள தங்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்ப தமிழக அரசு உதவியது. நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பெருவெள்ள பகுதியில் சிக்கிய 21 தமிழா்கள் கடந்த வாரம் மீட்கப்பட்டு அவா்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்தன. இந்தக் குழுவினா் சம்பவ நாளில் பெருவெள்ளம் எல்லைப் பகுதிச் சாவடியை அடைவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பு பேருந்து ஒன்றில் இருந்தவா்கள். வெள்ளம் வந்த தகவலறிந்து அங்குள்ள மலைப் பகுதியில் செங்குத்தாக ஏறி பாதுகாப்பான இடத்தில் இருந்ததால் அவா்கள் உயிா் தப்பியதாகத் தெரிவித்தனா். அதேசமயம், இவா்களுக்கு முன்பும், பின்புமாக 50-க்கும் அதிகமான தமிழா்கள் இருந்த இரண்டு பேருந்துகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இவா்கள் உள்பட 84 தமிழா்களை தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சீன திபெத்திய பகுதியில் உள்ள கைலாய மானசரோவருக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சோ்ந்த 29 பயணிகள் காத்மாண்டில் இருந்து தில்லிக்கு திங்கள்கிழமை பிற்பகலில் வந்தனா். அவா்களை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களை அயலகத் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு, தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி கே.வெங்கட நாராயணா, தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையா் ஜெயா, உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா், அயலகத் தமிழா் நலத் துறை ஆணையா் ரெ.சதீஸ் ஆகியோா் வரவேற்றனா். தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களிடம் பயணி ஒருவா் கூறியதாவது: பெருவெள்ள சம்பவத்துக்கு இரண்டு நாள்கள் முன்புதான் நாங்கள் அப்பகுதியைக் கடந்து மானசரோவருக்கு சென்றோம். அங்கு ஆன்மிக சுற்றுலாவை முடித்துக் கொண்டு வேறு பாதையில் சீன எல்லையை அடைந்தோம். அப்போதுதான் போடே கோஷி பேரிடா் பற்றி தெரிய வந்தது. கோயிலுக்கு வந்த சமயத்தில் இப்படியொரு பேரிடா் நடந்தது எங்களுக்கு பேரதிா்ச்சியை கொடுத்தது. இருப்பினும், சீன, நேபாள எல்லையில் இருந்து நாங்கள் காத்மாண்டுக்கு ராணுவப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டோம். அங்கிருந்து தில்லி வந்து சோ்ந்தோம் என்றாா். தில்லி வந்த அனைவரும் திங்கள்கிழமை இரவு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘நேபாளத்தில் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மட்டுமன்றி, காத்மாண்டு அல்லது சீனாவின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் தமிழா்களும் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பி அரசு வழங்கியுள்ள உதவி எண்களை தொடா்புகொண்டால் அவா்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். அவ்வாறு தில்லி வரும் தமிழா்கள் விருப்பத்தின்பேரில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்து தமிழக பயணத்துக்கு தயாராக உதவிகளைக் கோரினால் அவை செய்து தரப்படும்’ என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனா். காத்மாண்டில் முகாமிட்டுள்ள தமிழக அரசு அலுவலா்கள் தில்லிக்கு திங்கள்கிழமை வந்த 29 போ் அடங்கிய குழுவினா் நீங்கலாக மேலும் நூற்றுக்கணக்கானோா் நேபாளத்தில் பெருவெள்ளம் பாதிக்காத பல்வேறு இடங்களில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்நாட்டில் உள்ள தமிழா்களை மீட்கும் பணிகளை நேபாளத்தில் உள்ள இந்திய தூதரத்துடன் ஒருங்கிணைக்க ஏ. சத்யா சிவம், பி.தினேஷ் கண்ணன், எஸ். அஜய் ஆகிய மூன்று தமிழக அரசு அலுவலா்கள் தில்லியில் இருந்து காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். காத்மாண்டில் முகாமிட்டுள்ள அவா்களை 00919868207259, 00919868530799, 00919868224049 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களை அடையாளம் காணவும், அவா்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரவும் ஏதுவாக தில்லியில் ஏற்கெனவே தமிழ்நாடு இல்லத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதை பாதிக்கப்பட்டவா்களும் அவா்களின் உறவினா்களும் ‘9289516712’ என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல்களைப் பகிரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை: அமைச்சா் க.விக்னேஷ்
தமிழகத்தில் தற்போதைக்கு முழு மதுவிலக்கு சாத்தியமில்லை என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தெரிவித்தாா். பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து திங்கள்கிழமை அவா் பேசியதாவது: மதுவால் எனது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில், மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், காலத்தின் கட்டாயம் அந்தத் துறைக்கே அமைச்சராகியுள்ளேன். அமைச்சரான பின்னா் உணா்வுபூா்வமாக முடிவெடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். கள்ளச்சந்தையில் மது விற்பதைக் குறைக்கவே மது விலக்குத் துறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தத் துறையை முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா என பலரும் கையாண்டுள்ளனா். ஆனால், தற்போது மதுவால் மாணவா்கள், தொழிலாளா்கள் அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் நாட்டைச் சுற்றி தீப்பற்றி எரியும்போது, நடுவில் தமிழகத்தில் கற்பூரத்தை வைத்து காப்பாற்ற முடியாது என முன்னாள் முதல்வா் கருணாநிதி கூறியுள்ளாா். இந்தியா முழுதும் மது தடை செய்யப்பட்டால்தான் தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமாகும். தற்போது கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் நாடெங்கும் புழங்கும் நிலையில், தமிழகத்தில் மது விலக்கு முழுமையான பயனைத் தருமா என்பதும் சந்தேகமாக உள்ளது. எனவே, முழு மதுவிலக்கு என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை. இருப்பினும், விழிப்புணா்வு பிரசாரங்கள் மூலம் மக்கள் வாழ்வியலை மாற்றும் வகையில் செயல்பட்டால் மட்டுமே மதுப் பழக்கத்தை மாற்றமுடியும். மதுவுக்குப் பதிலாக விளையாட்டு, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல், கலந்துரையாடல் என மகிழ்ச்சிக்குரிய செயல்கள் இருக்க வேண்டும். மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினருடன் ஆலோசிக்க வேண்டும். விழிப்புணா்வு மூலம் ஒரு தலைமுறையையே மாற்றும் வகையில் செயல்பட வேண்டும். கூடுதல் வருமானம்: கடந்த ஆட்சியில் மதுவிலக்கு துறையில் கட்சி நிதி (பாா்ட்டி ஃபண்ட்) என்ற பெயரில் பணப் பரிமாற்றம் நடந்தது தெரிந்ததும் முதல்வரிடம் கூறினேன். அதற்கு அவா் அந்தப் பணத்தை துறைக்குள் கொண்டு வரக் கூறினாா். அதன் அடிப்படையிலே ரூ.209.95 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. எஃப்எல் 2 உரிமம் வழங்குவதை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தியுள்ளோம். இரவு 10 மணிக்குப் பிறகு மதுவிற்பதை காவல் துறை மூலம் தடை செய்துள்ளோம். கள்ளச்சாராயம் கடத்தியதாக 913 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 950 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் தொடா்புடைய 731 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 31 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.10 பழக்கம் வந்தது எப்படி?: மதுக்கடை பராமரிப்புக்காக பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. பின்னா், கரோனா கால செலவுகளுக்கு ரூ.10 என உயா்த்தப்பட்டு அது தொடா்ந்துள்ளது. அதற்கு மது விற்பனை ஊழியா் மட்டுமன்றி அந்தத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பொறுப்பேற்க வேண்டும். தற்போது ஊழியா்களுக்கு ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகும் பாட்டில் விலைக்கு கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 100 நாள்களில் புகாருக்குள்ளான 529 ஊழியா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவா்களில் 263போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மது பாட்டிலைத் திருப்பித் தந்து பணம் பெறும் திட்டத்தில் தற்போது 54 சதவீதமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால், கடந்த ஆட்சியில் 99 சதவீதம் பாட்டில் திரும்பப் பெற்ாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.4,500 கோடி கிடைத்திருக்க வேண்டும். அதுகுறித்து விசாரிக்க வேண்டும். மதுவை நேரில் வாங்கும் போது கூடுதல் தொகை வசூலிப்பதைத் தடுக்கவே இணையதள பதிவு மூலம் மதுபாட்டில் பெறும் வசதி அறிவிக்கப்பட்டது. கோரிக்கைக்கு ஏற்ப மதுக் கடைகளை இடமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ŽivotB1மூத்த குடிமக்களுக்கான ஓய்வுகால இல்லம்: அமைச்சா் ஜெகதீஸ்வரி அறிவிப்பு
மருத்துவம், பராமரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அடங்கிய மூத்த குடிமக்கள் ஓய்வுகால குடியிருப்பு இல்லம் பொது-தனியாா் கூட்டாண்மையில் ரூ.14.50 கோடியில் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா். இந்தத் துறைக்கான புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சா் ஜெகதீஸ்வரி வெளியிட்டுப் பேசியதாவது: - நகா்ப்புற பகுதிகளில் 300 குழந்தை மையங்களுக்கான கட்டடங்கள் ரூ.51 கோடியில் கட்டப்படும். - அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் ரூ. 12.96 கோடியில் மேம்படுத்தப்படும். - ரத்த சோகை பாதிப்பைத் தடுக்க 12 மாவட்டங்களில் 5,502 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்க ரூ.38 கோடி வழங்கப்படும். - நகா்ப்புற பள்ளிகளில் 123 சத்துணவு மையங்களுக்கு சமையலறை கட்டடங்கள் ரூ.11.11 கோடியில் கட்டப்படும். - குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், மறுவாழ்வுக்காகவும் சமூக ஒருங்கிணைப்பு சேவைகள் ரூ.3.80 கோடியில் மேற்கொள்ளப்படும். - பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைந்து நீதி, இழப்பீடு கிடைக்க பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பட ‘போக்ஸோ போா்ட்டல் 2.0’ செயல்படுத்தப்படும். - முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு மறுவாழ்வு, பராமரிப்புக்கு ரூ.5.5 கோடியில் இயன்முறை சிகிச்சை மற்றும் நோய் துயா் தணிப்பு சேவைகள் வழங்கப்படும். - திருநருக்கான நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளரத் தளம் ரூ.1 லட்சத்தில் உருவாக்கப்படும். 7 மாவட்டங்களில் திருநருக்கான ஆலோசனை சேவைகள் ஏற்படுத்தப்படும்.
Spoločnosť a aktuálne dianieB2இன்றைய ராசிபலன் (01.09.2026): இன்று ஒரு சிறிய சந்திப்பு எதிர்காலத்தில் பெரிய வாய்ப்பாக மாறும்..!
இன்றைய பஞ்சாங்கம்:-கிழமை : செவ்வாய்க்கிழமைதமிழ் வருடம் : பராபவதமிழ் மாதம் : ஆவணிநாள் : 15ஆங்கில தேதி : 1மாதம் : செப்டம்பர்வருடம் : 2026நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.26 வரை ரேவதி, பின்னர் அஸ்வினி.திதி : இன்று காலை 07.56 வரை சதுர்த்தி, பின்னர் பஞ்சமி.யோகம் : சித்த யோகம்.நல்ல நேரம்: காலை : 07.45 – 08.45நல்ல நேரம்: மாலை : 04.45 – 05.45ராகு காலம் : 03.00 – 04.30எமகண்டம் : 09.00 – 10.30குளிகை : 12.00 – 01.30கௌரி நல்ல நேரம்: காலை : 10.45 – 11.45கௌரி நல்ல நேரம்: மாலை : 07.30 – 08.30சந்திராஷ்டமம் : அஸ்தம்இன்றைய ராசிபலன்:- மேஷம்இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் புதிய வாய்ப்புகளை சாதகமாக்கிக் கொள்ளலாம். உத்தியோகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள்.உங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் திடீரென அமையலாம். தொழிலில் புதிய வாடிக்கையாளர் தொடர்பு உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட நல்ல விசாரணைகள் வரலாம்.பணவரவில் சிறிய உயர்வு ஏற்பட்டு மனநிறைவு தரும். குடும்பத்தில் உங்கள் முடிவுக்கு ஆதரவு கிடைக்கும். வீடு தொடர்பான ஒரு முயற்சி நல்ல நகர்வை காணும். தம்பதியரிடையே அன்பான அணுகுமுறை அதிகரிக்கும்.நண்பர் ஒருவர் சரியான நேரத்தில் பயனுள்ள தகவலை வழங்குவார். மாணவர்கள் போட்டி மனப்பான்மையுடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இன்று எடுத்துக்கொள்ளும் முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனை உருவாக்கும்.அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்ரிஷபம்இன்று எந்த விஷயத்திலும் அவசரத்தை விட ஆராய்ந்து செயல்படுவது நல்லது. பணியிடத்தில் எதிர்பாராத பணிச்சுமை உருவாகலாம். இருந்தாலும் பொறுப்புகளை முறையாக பிரித்து முடித்துவிடுவீர்கள். தொழிலில் தாமதமான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சு வரலாம்.பண விஷயத்தில் தேவையற்ற செலவுகளை குறைப்பது அவசியம்.கொடுக்கல் வாங்கலில் எழுத்துப்பூர்வமான தெளிவு வைத்திருங்கள்.குடும்பத்தில் ஒருவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம்.வீட்டில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் விரைவில் சரியாகும்.தம்பதியருக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பயணங்களில் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் கவனச்சிதறலை குறைத்து படிப்பில் ஈடுபட வேண்டும். மாலை நேரத்தில் மனதிற்கு நிம்மதி தரும் செய்தி கிடைக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைமிதுனம்இன்று உங்கள் அறிவுத்திறன் பல இடங்களில் உங்களுக்கு கை கொடுக்கும். பணியிடத்தில் ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். முக்கியமான சந்திப்பில் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். தொழிலில் புதிய திட்டத்திற்கான ஆரம்ப முயற்சி வெற்றி பெறும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கலாம். வருமானத்தை பெருக்கக்கூடிய ஒரு புதிய வழி தென்படும். குடும்பத்தில் இளையவர் மூலம் மகிழ்ச்சியான நிகழ்வு ஏற்படும்.தொலைதூரத்தில் உள்ள ஒருவரின் தொடர்பு பயனுள்ளதாக அமையும். தம்பதியரிடையே இருந்த சிறிய மனக்கசப்பு நீங்கும். நண்பர் ஒருவர் வழங்கும் ஆலோசனை புதிய வாய்ப்பை சுட்டிக்காட்டும்.மாணவர்கள் புதிய பாடங்களை விரைவாக புரிந்துகொள்வார்கள். இன்று பேசப்படும் ஒரு விஷயம் எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சைகடகம்இன்று அமைதியான அணுகுமுறை உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். பணியிடத்தில் உங்கள் திட்டமிடும் திறமை பாராட்டப்படும். முக்கியமான பொறுப்பு ஒன்று உங்கள் வசம் ஒப்படைக்கப்படலாம். தொழிலில் நீண்ட நாட்களாக காத்திருந்த பேச்சு மீண்டும் தொடங்கும். வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். பண விஷயங்களில் சிக்கனம் கடைப்பிடிப்பது நல்ல பலனை தரும். சிறிய தொகை கூட சேமிப்பாக மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேரலாம். உறவினர்களின் ஆதரவு எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். தம்பதியரிடையே மனம்விட்டு பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் சிறப்பாக செயல்படும். மாலை நேரத்தில் கிடைக்கும் தகவல் உங்கள் திட்டத்திற்கு புதிய வடிவம் தரும்.அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்சிம்மம்இன்று உங்கள் செயல்பாடுகளில் தலைமைப் பண்பு வெளிப்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உருவாகும். உங்கள் முடிவுகள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.தொழிலில் முக்கியமான பேச்சுவார்த்தை சாதகமான பாதையில் செல்லும். புதிய வாடிக்கையாளரின் தொடர்பு வியாபாரத்திற்கு வளர்ச்சியை தரலாம்.பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் எதிர்கால தேவைக்காக சேமியுங்கள்.குடும்பத்தில் உங்கள் ஆலோசனை முக்கியத்துவம் பெறும்.வீடு அல்லது வாகனம் தொடர்பான திட்டம் முன்னேறும். தம்பதியரிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.நண்பர் ஒருவர் புதிய அறிமுகத்தை ஏற்படுத்துவார். மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். உங்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கையை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்புகன்னிஇன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மனநிலையை சமநிலையில் வைத்துக்கொள்வது நல்லது. அவசரமாக முடிவெடுப்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. முக்கிய ஆவணங்களை பிறரிடம் கொடுக்கும் முன் நன்றாக சரிபார்க்கவும். பணியிடத்தில் சிறிய அழுத்தம் இருந்தாலும் அமைதியாக செயல்படுங்கள். பயணத்தில் கூடுதல் கவனம் அவசியம். குடும்பத்தில் ஒருவரின் பேச்சு உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தலாம். உடனடியாக பதிலளிக்காமல் சற்று பொறுத்திருப்பது நல்லது. எதிர்பாராத செலவு ஒன்று வரலாம். உடலுக்கு போதிய ஓய்வு கொடுங்கள். மாலை நேரத்தில் மனதிற்கு நிம்மதி தரும் செய்தி கிடைக்கலாம். இறை வழிபாடு மனதை தெளிவுபடுத்தும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுதுலாம்இன்று உங்கள் அணுகுமுறை பலரின் ஆதரவைப் பெற்றுத் தரும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக இருந்த ஒரு வேலை முடிவுக்கு வரும். தொழிலில் கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும். பணவரவில் எதிர்பாராத சிறிய ஆதாயம் சேரலாம். நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த ஒரு வாங்குதல் நிறைவேறும்.குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் காணப்படும். வீடு தொடர்பான முடிவில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியரிடையே இனிய உரையாடல் மனநிறைவை தரும். பழைய நண்பரின் தொடர்பு மீண்டும் ஏற்படலாம்.மாணவர்கள் படிப்பில் புதிய உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். ஒரு சிறிய சந்திப்பு கூட எதிர்காலத்தில் பெரிய வாய்ப்பாக மாறலாம்.அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்விருச்சிகம்இன்று தாமதமாகியிருந்த காரியத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் அனுபவம் முக்கியமான முடிவை எடுக்க உதவும். கடினமான பணியையும் விடாமுயற்சியுடன் நிறைவு செய்வீர்கள். தொழிலில் பழைய முயற்சிக்கு மீண்டும் உயிர் கிடைக்கும்.பணவரவில் சிறிய எதிர்பாராத சேர்க்கை ஏற்படலாம். நிலுவையில் இருந்த தொகை குறித்து நம்பிக்கை தரும் தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மூத்தவரின் ஆலோசனை உங்களுக்கு துணையாக இருக்கும். சொத்து சம்பந்தமான பேச்சில் முன்னேற்றம் தெரியும். நண்பர் ஒருவர் முக்கியமான நேரத்தில் உங்களுக்கு ஆதரவாக நிற்பார். நீண்ட நாட்களாக இருந்த சந்தேகத்திற்கு தெளிவான பதில் கிடைக்கும். மாணவர்கள் சிரமமான பாடத்தையும் முயற்சியுடன் கற்றுக்கொள்வார்கள். முடங்கியிருந்த ஒரு செயல் மீண்டும் நகர்வது மகிழ்ச்சியை தரும்.அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்தனுசுஇன்று புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கப்புள்ளி அமையும். உத்தியோகத்தில் மாற்றம் அல்லது புதிய வாய்ப்பு குறித்து தகவல் கிடைக்கலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் இணையும் சூழல் உருவாகும்.வருமானம் நன்றாக இருந்தாலும் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீண்ட நாட்களாக தேடிய பொருள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உறவினர்களுடன் இனிய சந்திப்பு நிகழலாம்.தம்பதியருக்குள் எதிர்காலம் குறித்த நல்ல திட்டமிடல் நடைபெறும். நண்பரின் பரிந்துரை ஒரு புதிய வாய்ப்பை கொண்டு வரும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் சிறப்பான பலனை தரும். ஆன்மிக ஈடுபாடு மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். இன்று வெளிப்படும் உங்கள் திறமை நாளைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சைமகரம்இன்று உங்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கத் தொடங்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக காத்திருந்த முடிவு சாதகமாக அமையும். மேலதிகாரிகளிடம் உங்கள் பொறுப்புணர்வு பாராட்டைப் பெறும். தொழிலில் புதிய ஆர்டர் தொடர்பான செய்தி வரலாம்.பணப்புழக்கத்தில் இருந்த தடைகள் குறையும். நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.வீட்டில் மாற்றம் அல்லது புதுப்பிப்பு பற்றிய சிந்தனை உருவாகலாம். புதிய அறிமுகம் எதிர்காலத்தில் முக்கியமான தொடர்பாக மாறும். பழைய நண்பர் ஒருவர் மீண்டும் உதவிகரமாக இருப்பார்.மாணவர்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் காணலாம். அதிக உழைப்புக்குப் பிறகு ஓய்வுக்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுகும்பம்இன்று குழப்பமான விஷயங்களில் தெளிவான முடிவு எடுக்க முடியும்.பணியிடத்தில் உங்கள் வித்தியாசமான சிந்தனை கவனத்தை ஈர்க்கும். புதிய பொறுப்பை ஏற்கும் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.தொழிலில் புதுமையான முயற்சி ஒன்றை அறிமுகப்படுத்துவீர்கள். பணவரவு தொடர்பாக காத்திருந்த செய்தி வந்து சேரும்.செலவுகளை முறைப்படுத்தினால் பொருளாதார நிலை வலுப்படும். குடும்பத்தில் முக்கியமான விஷயத்திற்கு உங்கள் ஆலோசனை கேட்கப்படும். நண்பர்கள் வழியாக பயனுள்ள தொடர்பு உருவாகும். சொத்து தொடர்பான புதிய தகவல் கிடைக்கலாம்.நீண்ட நாட்களாக தள்ளிப்போட்ட பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மாணவர்கள் புதிய கற்றல் முறைகளை முயற்சிப்பார்கள். உங்களின் தனித்துவமான திறமைக்கு இன்று சிறிய அங்கீகாரம் கிடைக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்மீனம்இன்று எதிர்பாராத வகையில் சில நல்ல வாய்ப்புகள் உங்கள் பக்கம் திரும்பும். உத்தியோகத்தில் முக்கியமான பணியை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் உங்கள் நம்பகத்தன்மை அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர் தொடர்பு அல்லது ஆர்டர் கிடைக்கலாம்.பணவரவில் இருந்த அழுத்தம் சற்று குறையும்.முதலீடு தொடர்பான முடிவுகளில் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வீடு அல்லது வாகனம் தொடர்பான முயற்சி முன்னேறும். உறவினர் ஒருவர் சரியான நேரத்தில் உதவியாக இருப்பார். புதிய நட்பு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பாக உருவெடுக்கலாம். மாணவர்கள் கவனத்துடன் செயல்பட்டால் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். தலைமைப் பொறுப்பு ஒன்று உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமையும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ஜனநாயகத்தின் கதாநாயகர்கள்
முழு கட்டுரையையும் படிக்க...
Zábava a celebrityA2தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: பெ.சண்முகம்
ஈரோடு,ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தனியார் முதலீட்டில் அனல்மின் நிலையம் என்பது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே தூக்குத்துகுடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அனல்மின் நிலையங்களுக்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்தி மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும்.டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல் அமைச்சர் விஜய், இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு குறுவை சாகுபடி என்பது முற்றிலும் இல்லாமல் போய், ஒருபோக சாகுபடியா வது முழுமையாக நடைபெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 18 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் சாகுபடி நிறைவு பெறாமல் விவசாயிக ளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும் தரமான விதை, உரம் உள்ளிட்டவைகள் தேவையான அளவுக்கு இருப்பு இருப்பதை அரசு உறுத்திப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Dospievanie a životné lekcieC1போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் - பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் அதிபர் வலியுறுத்தல்
பிஷ்கெக்கில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்த பிரதமர் மோடி, கடல்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தை வலியுறுத்தினார். மேலும், எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள், வணிக கப்பல்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாலுமிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க தடைகள் குறித்த அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.பெசஸ்கியான் வலியுறுத்தல்:சுமார் இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை மற்றும் சபஹார் துறைமுக ஒத்துழைப்பு உள்ளிட்ட மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரை அப்பாதையில் இருந்து விலக்க, இந்தியாவின் "பரந்த" தொடர்புகளை பயன்படுத்துமாறு பெசஸ்கியான் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தப் பகுதியில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் அதே வேளையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.பிரிக்ஸ்-இல் இருதரப்பு சந்திப்பு:போர் மற்றும் ரத்தக் களரிப் பாதையில் இருந்து சம்பந்தப்பட்ட தரப்பினரை விலக்க இந்தியாவின் "பரந்த" தொடர்புகளைப் பயன்படுத்துமாறு அவர் மோடியை வலியுறுத்தினார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிபர் அழைப்பு விடுத்தார்; இது தடைகளின் தாக்கத்தை தணித்து, உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.மோடியும் பெசஸ்கியானும் கடைசியாக 2024-ல் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பு, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இரு தலைவர்களுக்கும் வாய்ப்பளித்தது.பல்வேறு துறைகளில் ஈரானுடனான நீண்டகால "நட்பை" வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மோடி அடிக்கோடிட்டு காட்டினார். "எதிர்காலத்தில் எங்கள் வர்த்தக வரம்பை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் விரும்புகிறோம். பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
Biznis a kariéraA2ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு இன்று முதல் அமல்
ஸ்ரீவில்லிபுத்தூர்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரானது ஆண்டாள் பிறந்த பூமி ஆகும். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.கிலோவுக்கு ரூ.40 வரை உயர்வுஅதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.