Тамилски: ниво Майсторство
Майсторство е майсторско владеене на тамилски: разбираш почти всичко и забелязваш нюанси, хумор и регистър. Тези уроци използват богати, идиоматични текстове, за да изострят най-фините детайли на езика.
Какво можеш да правиш на майсторство
- Разбираш почти всичко, което четеш или чуваш.
- Обобщаваш информация от различни източници.
- Изразяваш фини нюанси на значението точно.
Около 16 000 думи и приблизително 1000–1200 часа учене, за да достигнеш това ниво.
Уроци по тамилски за майсторство
Новини
Виж всички 7
ОбразованиеМайсторствоToday Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2026: ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் பவனி
இன்றைய பஞ்சாங்கம்பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)பிறை : தேய்பிறைதிதி : சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமிநட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணியோகம் : சித்தயோகம் ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரைஎமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரைசூலம் : வடக்குநல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. இன்றைய ராசிபலன்மேஷம் - ஆர்வம்ரிஷபம் - தேர்ச்சிமிதுனம் - வரவுகடகம் - உழைப்புசிம்மம் - முயற்சிகன்னி - ஜெயம் துலாம் - போட்டிவிருச்சிகம் - ஆக்கம்தனுசு - அனுகூலம்மகரம் - நன்மைகும்பம் - மேன்மைமீனம் - கடமை
Бизнес и кариераМайсторство150 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்
"ஒரு மனிதனுக்கு ஒரு மீனை கொடுத்தால் அன்று மட்டும் அவனை சாப்பிட வைத்து பசியாற செய்துவிடுவீர்கள். ஆனால் அதற்கு பதிலாக மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தீர்கள் என்றால், அவனுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவளித்துவிடுவீர்கள்" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.தமிழக அரசுஇது ஒருபக்கம் தேவைப்படுபவர்களுக்கு செய்யும் உதவி என்றாலும், அதை அவர்கள் கையேந்தி வாங்காமல் தன்னம்பிக்கையுடன் உழைத்து சம்பாதிக்க காட்டும் வழியாகும். இதைத்தான் இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமைதான். ஆனால் அதை உதவியாக செய்யாமல், அவர்களே உழைத்து சம்பாதித்துக்கொள்ள நல்ல வழி இப்போது காட்டப்பட்டுள்ளது.125 நாட்கள் வேலை திட்டம்2004-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார். விவசாய வேலை இல்லாத நேரங்களில் இந்த 100 நாட்கள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு கைகொடுத்தது. இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்கள் வேலை திட்டமாக மாற்றியுள்ளது.வெற்றி 150இந்த நிலையில் தமிழக அரசு மேலும் ஒருபடி சென்று, கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 'வெற்றி 150' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி 125 நாட்கள் வேலைவாய்ப்பை நிறைவு செய்த குடும்பங்களுக்கு மேலும் 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்த கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.4 மணி நேரம்இதன்மூலம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்போடு, தமிழக அரசின் முயற்சியால் மேலும் 25 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை வழங்கியுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடங்களிலேயே 8 மணி நேரம் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் மற்ற தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு ஈடாக செய்யவேண்டியதில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடத்தில் 4 மணி நேரம் இருந்தால் போதும். அவர்களுக்கு மிக எளிதான வேலையே கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற எளிதான வேலையே வழங்கப்படும்.1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள்மற்றவர்கள் செய்யும் வேலையில் 50 சதவீத வேலையே அவர்கள் செய்யவேண்டும் என்றாலும் அவர்களுக்கு முழு சம்பளமான ரூ.336 கொடுக்கப்படும். தமிழ்நாட்டில் இப்போது இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற 1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்க விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் பணி அட்டை வழங்கப்படவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நாம் யாரையும் சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. உழைத்து சம்பாதிக்கிறோம் என்ற கவுரவத்தையும், பெருமையையும் இந்த உத்தரவு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை: அமைச்சா் க.விக்னேஷ்
தமிழகத்தில் தற்போதைக்கு முழு மதுவிலக்கு சாத்தியமில்லை என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தெரிவித்தாா். பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து திங்கள்கிழமை அவா் பேசியதாவது: மதுவால் எனது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில், மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், காலத்தின் கட்டாயம் அந்தத் துறைக்கே அமைச்சராகியுள்ளேன். அமைச்சரான பின்னா் உணா்வுபூா்வமாக முடிவெடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். கள்ளச்சந்தையில் மது விற்பதைக் குறைக்கவே மது விலக்குத் துறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தத் துறையை முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா என பலரும் கையாண்டுள்ளனா். ஆனால், தற்போது மதுவால் மாணவா்கள், தொழிலாளா்கள் அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் நாட்டைச் சுற்றி தீப்பற்றி எரியும்போது, நடுவில் தமிழகத்தில் கற்பூரத்தை வைத்து காப்பாற்ற முடியாது என முன்னாள் முதல்வா் கருணாநிதி கூறியுள்ளாா். இந்தியா முழுதும் மது தடை செய்யப்பட்டால்தான் தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமாகும். தற்போது கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் நாடெங்கும் புழங்கும் நிலையில், தமிழகத்தில் மது விலக்கு முழுமையான பயனைத் தருமா என்பதும் சந்தேகமாக உள்ளது. எனவே, முழு மதுவிலக்கு என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை. இருப்பினும், விழிப்புணா்வு பிரசாரங்கள் மூலம் மக்கள் வாழ்வியலை மாற்றும் வகையில் செயல்பட்டால் மட்டுமே மதுப் பழக்கத்தை மாற்றமுடியும். மதுவுக்குப் பதிலாக விளையாட்டு, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல், கலந்துரையாடல் என மகிழ்ச்சிக்குரிய செயல்கள் இருக்க வேண்டும். மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினருடன் ஆலோசிக்க வேண்டும். விழிப்புணா்வு மூலம் ஒரு தலைமுறையையே மாற்றும் வகையில் செயல்பட வேண்டும். கூடுதல் வருமானம்: கடந்த ஆட்சியில் மதுவிலக்கு துறையில் கட்சி நிதி (பாா்ட்டி ஃபண்ட்) என்ற பெயரில் பணப் பரிமாற்றம் நடந்தது தெரிந்ததும் முதல்வரிடம் கூறினேன். அதற்கு அவா் அந்தப் பணத்தை துறைக்குள் கொண்டு வரக் கூறினாா். அதன் அடிப்படையிலே ரூ.209.95 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. எஃப்எல் 2 உரிமம் வழங்குவதை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தியுள்ளோம். இரவு 10 மணிக்குப் பிறகு மதுவிற்பதை காவல் துறை மூலம் தடை செய்துள்ளோம். கள்ளச்சாராயம் கடத்தியதாக 913 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 950 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் தொடா்புடைய 731 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 31 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.10 பழக்கம் வந்தது எப்படி?: மதுக்கடை பராமரிப்புக்காக பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. பின்னா், கரோனா கால செலவுகளுக்கு ரூ.10 என உயா்த்தப்பட்டு அது தொடா்ந்துள்ளது. அதற்கு மது விற்பனை ஊழியா் மட்டுமன்றி அந்தத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பொறுப்பேற்க வேண்டும். தற்போது ஊழியா்களுக்கு ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகும் பாட்டில் விலைக்கு கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 100 நாள்களில் புகாருக்குள்ளான 529 ஊழியா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவா்களில் 263போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மது பாட்டிலைத் திருப்பித் தந்து பணம் பெறும் திட்டத்தில் தற்போது 54 சதவீதமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால், கடந்த ஆட்சியில் 99 சதவீதம் பாட்டில் திரும்பப் பெற்ாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.4,500 கோடி கிடைத்திருக்க வேண்டும். அதுகுறித்து விசாரிக்க வேண்டும். மதுவை நேரில் வாங்கும் போது கூடுதல் தொகை வசூலிப்பதைத் தடுக்கவே இணையதள பதிவு மூலம் மதுபாட்டில் பெறும் வசதி அறிவிக்கப்பட்டது. கோரிக்கைக்கு ஏற்ப மதுக் கடைகளை இடமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
Истории
Виж всички 320Диалози
Виж всички 320Кратки речи
Виж всички 320ஜிம்மிற்குச் செல்லாமல் இருப்பதற்கு நான் கூறிய ஒவ்வொரு சாக்குப்போக்கின் அதிகாரப்பூர்வமற்ற தணிக்கை
குற்ற உணர்வு தரும் இன்பத்தைப் பாதுகாத்தல்
இலக்கியமாக விளையாட்டு வர்ணனை
எனது அதீத லட்சியமிக்க திருமண கேக் முயற்சியின் சோக நகைச்சுவைக் கதை
Подкасти
Виж всички 27Развлечения
போர்டு கேம்களின் எதிர்பாராத மறுமலர்ச்சி
டிஜிட்டல் யுகத்தில் டேபிள்டாப் கேமிங்கின் ஆச்சரியமான மறுஎழுச்சியை கார்த்திக்கியும் திவ்யாவும் ஆராய்கிறார்கள். தூசி படிந்த குடும்ப விளையாட்டு என்ற பழைய பிம்பத்தை உடைத்து, போர்டு கேம்கள் எப்படி தனக்கென பிரபலங்களையும் பொருளாதாரத்தையும் வடிவமைப்புத் தத்துவத்தையும் கொண்ட ஒரு செழிப்பான பொழுதுபோக்கு கலாசாரமாக மாறியுள்ளன என்பதை அவர்கள் விவாதிக்கிறார்கள்.
Приятелство
நட்பின் தத்துவம்
கார்த்திக் மற்றும் திவ்யா இருபத்தியைந்து நூற்றாண்டுகளாக நட்பு பற்றிய தத்துவச் சிந்தனைகளை ஆராய்கின்றனர். அரிஸ்டாட்டிலின் பயன்பாடு, இன்பம் மற்றும் நற்பண்பு வகைப்பாடுகள் முதல் மாண்டெய்னின் விவரிக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நவீன தத்துவ விமர்சனங்கள் வரை நட்பின் பரிமாணங்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப விவாதிக்கின்றனர்.
Общество
மூன்றாம் இடம் மறைந்து வருகிறது
கார்த்திக் மற்றும் திவ்யா ஆகியோர், சமூகங்களை ஒன்றாக இணைத்த முறைசாரா கூடுமிடங்கள், கஃபேக்கள், மளிகைக் கடைகள் ஆகியவை அமைதியாக மறைந்து வருவதை ஆராய்கின்றனர். ரே ஓல்டன்பர்க்கின் 'மூன்றாம் இடம்' என்ற கருத்தையும், ராபர்ட் புட்னத்தின் சமூக மூலதன ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டு இது விவாதிக்கப்படுகிறது.
Видеа
Виж всички 29Тамилски майсторство по теми
Други нива по тамилски
Не си сигурен, че това е твоето ниво?
Направи краткия тест за определяне на нивото и ще ти предложим откъде да започнеш.
Направи теста за ниво

