Тамилски: ниво Средно ниво
Средно ниво е самостоятелният етап: можеш да следиш основните неща в истински текстове на тамилски по познати теми. Тези уроци използват по-дълги текстове и естествени фрази, така че срещаш езика така, както хората наистина го използват.
Какво можеш да правиш на средно ниво
- Следиш основното в ясна реч по познати теми.
- Описваш преживявания, планове и мнения.
- Четеш прости статии и истории.
Около 2000 думи и приблизително 350–400 часа учене, за да достигнеш това ниво.
Уроци по тамилски за средно ниво
Новини
Виж всички 7
Всекидневен животСредно нивоஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி
புதுடெல்லி,ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டி20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.பவானி தேவிஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.20 வீரர், வீராங்கனைகள் தேர்வுஇந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இன்று பயிற்சி முகாம்ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
ПътуванияСредно нивоசென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மழை..! வானிலை மையம் அப்டேட்
சென்னை, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (02.09.2026) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழைஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (01-09-2026) மற்றும் நாளை (02-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் (03-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.04-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.05-09-2026 மற்றும் 06-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:இன்று (01-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வங்கக்கடல் பகுதிகள்:01-09-2026 மற்றும் 02-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.03-09-2026 மற்றும் 04-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.அரபிக்கடல் பகுதிகள் :01-09-2026: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.02-09-2026 முதல் 04-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ПътуванияСредно нивоToday Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2026) | 6 AM Headlines | Thanthi TV
கிர்கிஸ்தானில் PM மோடி - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்புஅமைதிக்கு இந்தியா ஆதரவளிக்கும் - பிரதமர் மோடிஜிடிபி 7.8%ஆக உயர்வு - பிரதமர் மோடி பெருமிதம்ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரிப்பு - புதின்இன்று மேட்டூர் அணையில் நீர் திறந்து வைக்கிறார் CM விஜய்முதல்வர் வருகை - மேட்டூரில் ஏற்பாடுகள் தீவிரம்நேபாள வெள்ளம் - ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை நேபாள வெள்ளம் - 158 இந்தியர்கள் மீட்புநேபாளத்தில் மீட்கப்பட்ட 29 தமிழர்கள் டெல்லி வருகை"நேபாள் துயரம் - மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது"சிந்து நதி நீர் ஒப்பந்தம் - இந்தியா திட்டவட்டம் நாசிக்கில் இருந்து ரயிலில் சென்னை வந்த 840 டன் வெங்காயம்
Истории
Виж всички 320Диалози
Виж всички 320Кратки речи
Виж всички 320ஒரு புராணத்தை ஆராய்வதில் நான் செலவிட்ட கோடைக்காலம்
பார்ப்பதற்கு ஒரு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கண்டறிதல்
தோல்வியைப் பார்த்து சிரிக்க நான் கற்றுக்கொண்டது எப்படி
வளர்ந்து வரும் காலத்தில் பணத்துடனான எனது உறவு
Подкасти
Виж всички 10Образование
இடைவெளி ஆண்டு எடுப்பது பயனுள்ளதா?
கார்த்திக்க் மற்றும் திவ்யா பள்ளிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே, அல்லது படிப்புக்கும் வேலைக்கும் இடையே ஒரு இடைவெளி ஆண்டு எடுப்பது பற்றி விவாதிக்கிறார்கள். திவ்யாவின் நண்பி மீனாவின் இடைவெளி ஆண்டு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, அதன் ஆபத்துகள், நன்மைகள் மற்றும் ஒரு இடைவெளி ஆண்டை உண்மையில் பயனுள்ளதாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி பேசுகிறார்கள்.
Бизнес и кариера
வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலைத் தொடங்கிய கதை
கார்த்திக்கின் நண்பர் பிரியா தனது நிலையான வேலையை விட்டுவிட்டு ஒரு இனிப்பகம் ஒன்றைத் தொடங்கினார். அவரும் திவ்யாவும், சம்பள வாழ்க்கையிலிருந்து சிறு தொழில் உரிமையாளராக மாறுவது பற்றியும், அந்த முடிவை வெற்றிகரமாகச் செயல்படுத்த என்ன தேவை என்பது பற்றியும் பேசுகின்றனர்.
Идване на възраст
நண்பர்களின் அழுத்தமும் வளர்ச்சியும்
கார்த்திக்க் மற்றும் திவ்யா, பள்ளி நாட்களில் நண்பர்களின் அழுத்தத்தை எதிர்கொண்ட உண்மையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வகுப்பை விட்டு வெளியேறுவது முதல் புகைபிடிக்கும் முயற்சி வரை, சமூக செல்வாக்கின் நல்ல மற்றும் கெட்ட பக்கங்களைப் பற்றி இருவரும் விவாதிக்கிறார்கள்.
Видеа
Виж всички 29
Средно ниво6:47Kathirikkai Gravy Recipe in Tamil | Kathrikkai kulambu for Chapathi, Rice | Brinjal Gravy in Tamil
Madras Samayal
Средно ниво3:43இதவிட வேறென்ன வேணும் | Sharing Love with Elders | Media Masons
Media Masons
Средно ниво24:17Actress Ammu Abirami and Sakthi in Samodu Vilayadu Season 4 | Samvishal | Media Masons
Media Masons
Тамилски средно ниво по теми
Други нива по тамилски
Не си сигурен, че това е твоето ниво?
Направи краткия тест за определяне на нивото и ще ти предложим откъде да започнеш.
Направи теста за ниво