දෙමළ භාෂාවෙන් මිත්‍රත්වය

මිත්‍රත්වය: මිතුරන් හමුවීම, විශ්වාස කිරීම සහ රැකගැනීම, ඒ සමඟ යන කතාබහ. ශ්‍රව්‍ය, පරිවර්තන සහ ප්‍රශ්නාවලි සමඟ, ආරම්භක සිට ප්‍රවීණත්වය දක්වා අතරින් ඔබේ මට්ටමට දෙමළ කියවා සවන් දෙන්න.

මිත්‍රත්වය පිළිබඳ දෙමළ පාඩම්

මිත්‍රත්වයආරම්භක
Daily Thanthiබිනර 1

வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் வழக்குதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மற்றொரு வழக்கையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார்.வாக்குப்பதிவில் முறைகேடுதேர்தல் வழக்கு மனுவில், "கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில், சரிபார்ப்புக்காக சில எந்திரங்கள் எடுக்கப்பட்டன. அதில் சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான வி.வி.பேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.தீர்ப்பு தள்ளிவைப்புஇந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளோம். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டது.எனவே, காலதாமதமாக தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை” என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேஷாத்திரி நாயுடு, "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.திரும்ப பெற அனுமதிஅதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வழிகாட்டு நெறிமுறைகளில் புதிதாக கடந்த 2025-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர்.

මිත්‍රත්වයප්‍රවීණත්වය
Dinamaniබිනර 1

ஜனநாயகத்தின் கதாநாயகர்கள்

முழு கட்டுரையையும் படிக்க...

පොඩ්කාස්ට්

සියල්ල 4ම බලන්න
මූලික17:21

මිත්‍රත්වය

பழைய நண்பர்கள், புதிய செய்தி

கார்த்திக்கின் நண்பர் சுரேஷ் மற்றும் திவ்யாவின் பல்கலைக்கழகத் தோழி மீனா ஆகியோர் பல வருடங்களுக்குப் பிறகு பழைய நண்பர்களுடன் மீண்டும் எப்படி இணைந்தார்கள் என்பதைப் பற்றி கார்த்திக் மற்றும் திவ்யா பேசுகிறார்கள். முதல் செய்தியை அனுப்புவது எவ்வளவு எளிது என்பதையும் அவர்கள் விளக்குகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்අසමින් ඉගෙන ගන්න
ප්‍රවීණත්වය21:14

මිත්‍රත්වය

நட்பின் தத்துவம்

கார்த்திக் மற்றும் திவ்யா இருபத்தியைந்து நூற்றாண்டுகளாக நட்பு பற்றிய தத்துவச் சிந்தனைகளை ஆராய்கின்றனர். அரிஸ்டாட்டிலின் பயன்பாடு, இன்பம் மற்றும் நற்பண்பு வகைப்பாடுகள் முதல் மாண்டெய்னின் விவரிக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நவீன தத்துவ விமர்சனங்கள் வரை நட்பின் பரிமாணங்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப விவாதிக்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்අසමින් ඉගෙන ගන්න
මූලික17:00

මිත්‍රත්වය

இணையத்தில் நான் சந்தித்த ஒரு நண்பர்

கார்த்திக் மற்றும் திவ்யா ஆகியோர் இணைய விளையாட்டு மற்றும் ஒரு மன்றம் மூலம் அவர்கள் எப்படி நெருங்கிய நண்பர்களைக் கண்டுபிடித்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த நட்பு காலப்போக்கில் எப்படி வலுவானது என்பதையும் பேசுகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்අසමින් ඉගෙන ගන්න

මට්ටම අනුව දෙමළ භාෂාවෙන් මිත්‍රත්වය

වෙනත් දෙමළ මාතෘකා

මිත්‍රත්වය සමඟ දෙමළ ඉගෙන ගැනීම පිළිබඳ ප්‍රශ්න

මිත්‍රත්වය හරහා දෙමළ ඉගෙන ගන්නේ ඇයි?
ඔබ සැලකිලිමත් වන අන්තර්ගතය ඔබේ අවධානය රඳවාගන්නා අතර, එම වචනම විවිධ පාඩම්වල නැවත පැමිණේ. එම පුනරාවර්තනයයි වචන මාලාව මතකයේ රැඳවන්නේ.
දෙමළ භාෂාවෙන් මිත්‍රත්වය සඳහා මා තෝරාගත යුත්තේ කුමන මට්ටමද?
ඔබට වචන දහයෙන් නවයක් පමණ තේරෙන මට්ටම තෝරන්න. සෑම මාතෘකාවකටම ආරම්භක සිට ප්‍රවීණත්වය දක්වා දක්වා පාඩම් ඇති බැවින්, ඔබට පහසුවෙන් අරඹා ඉහළට යා හැක.
මෙම දෙමළ අන්තර්ගතය නොමිලේද?
ඔව්. ඉගෙනීම නොමිලේ, ශ්‍රව්‍ය, පරිවර්තන සහ ප්‍රශ්නාවලි සමඟ. Premium මඟින් අසීමිත පුහුණුව සහ අපනයන වැනි අමතර දේ එක් වේ.