ਉੱਚ ਪੱਧਰੀ

ਤਮਿਲ: ਉੱਚ ਪੱਧਰੀ ਪੱਧਰ

ਉੱਚ ਪੱਧਰੀ ਉੱਨਤ ਤਮਿਲ ਹੈ: ਗੁੰਝਲਦਾਰ ਟੈਕਸਟ, ਅਣਕਹੇ ਮਤਲਬ ਅਤੇ ਪ੍ਰਗਟਾਵਿਆਂ ਦੀ ਵਿਆਪਕ ਰੇਂਜ। ਇਹ ਪਾਠ ਅਸਲੀ, ਚੁਣੌਤੀਪੂਰਨ ਸਮੱਗਰੀ ਵਰਤਦੇ ਹਨ, ਤਾਂ ਜੋ ਤੁਸੀਂ ਸ਼ੁੱਧਤਾ ਅਤੇ ਕੁਦਰਤੀ ਸ਼ੈਲੀ ਬਣਾਓ।

ਉੱਚ ਪੱਧਰੀ ’ਤੇ ਤੁਸੀਂ ਕੀ ਕਰ ਸਕਦੇ ਹੋ

  • ਔਖੇ, ਲੰਮੇ ਟੈਕਸਟ ਅਤੇ ਅਣਕਹੇ ਮਤਲਬ ਸਮਝੋ।
  • ਸ਼ਬਦ ਲੱਭੇ ਬਿਨਾਂ ਰਵਾਨੀ ਨਾਲ ਆਪਣੀ ਗੱਲ ਕਹੋ।
  • ਕੰਮ ਅਤੇ ਪੜ੍ਹਾਈ ਲਈ ਭਾਸ਼ਾ ਨੂੰ ਲਚਕੀਲੇ ਢੰਗ ਨਾਲ ਵਰਤੋ।

ਇਸ ਪੱਧਰ ਤੱਕ ਪਹੁੰਚਣ ਲਈ ਲਗਭਗ 8,000 ਸ਼ਬਦ ਅਤੇ ਤਕਰੀਬਨ 700–800 ਘੰਟੇ ਪੜ੍ਹਾਈ।

ਉੱਚ ਪੱਧਰੀ ਲਈ ਤਮਿਲ ਪਾਠ

ਖ਼ਬਰਾਂ

ਸਾਰੇ 6 ਦੇਖੋ
ਖੇਡਾਂਉੱਚ ਪੱਧਰੀ
Maalai Malar1 ਸਤੰ

அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.சாம் சி.எஸ். 100:இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.ரிலீஸ் அப்டேட்:முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

ਸਿੱਖਿਆਉੱਚ ਪੱਧਰੀ
Maalai Malar1 ਸਤੰ

அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்

அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வெள்ளை மாளிகை அறிக்கை:"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்."முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.ராணுவ அதிகாரி தகவல்:பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.

ਵਿਗਿਆਨ ਅਤੇ ਤਕਨੀਕਉੱਚ ਪੱਧਰੀ
Thanthi TV1 ਸਤੰ

ஏழரை 01.09.2026

ਪੌਡਕਾਸਟ

ਸਾਰੇ 10 ਦੇਖੋ
ਉੱਚ ਪੱਧਰੀ28:25

ਮਨੋਰੰਜਨ

தொலைக்காட்சி தயாரிப்பின் திரைக்குப் பின்னால்

கார்த்திக்க் மற்றும் திவ்யா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உண்மையில் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி விவாதிக்கின்றனர். கதையாசிரியர்கள் அறை, கடினமான படப்பிடிப்பு அட்டவணை மற்றும் ஒரு தொடரை சாத்தியமாக்கும் குழுவினரின் பணிகள் குறித்து இவர்கள் பேசுகின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்ਸੁਣੋ ਅਤੇ ਪੜ੍ਹੋ
ਉੱਚ ਪੱਧਰੀ23:31

ਵੱਡਾ ਹੋਣਾ

உங்கள் ஆர்வத்தைக் கண்டறிதல்: கட்டுக்கதையும் வழிமுறையும்

கார்த்திக்கிற்கும் திவ்யாவிற்கும் அர்த்தமுள்ள வேலையை நோக்கிய சுற்றி வளைத்த, சில நேரங்களில் தற்செயலான பாதைகள் எப்படி அமைந்தன என்பதை அவர்கள் விவாதிக்கிறார்கள். நிலப்படம் வரைவதிலிருந்து புவியியல் ஆசிரியராக மாறியது, உள்ளூர் பத்திரிகையிலிருந்து பாட்காஸ்ட் வரை வந்த பயணம், ஒரே ஒரு 'ஆர்வம்' காத்திருக்கிறது என்ற பிரபலமான கட்டுக்கதையை இவர்கள் உடைக்கிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்ਸੁਣੋ ਅਤੇ ਪੜ੍ਹੋ
ਉੱਚ ਪੱਧਰੀ25:56

ਕਾਰੋਬਾਰ ਅਤੇ ਕਰੀਅਰ

ஹசில் கலாச்சாரமா, வேலை-வாழ்க்கை சமநிலையா?

இருபதுகளில் ஓய்வின்றி உழைத்து தொழில்முனைவுக் கனவைத் துரத்திய கார்த்திக், எல்லைகளையும் ஓய்வையும் மையமாக வைத்து வாழ்க்கையை அமைத்த திவ்யாவிடம் விவாதிக்கிறார். ஹசில் கலாச்சாரம் வெற்றிக்கான பாதையா அல்லது ஒரு பொறியா என்பதே இன்றைய விவாதம்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்ਸੁਣੋ ਅਤੇ ਪੜ੍ਹੋ

ਵਿਸ਼ਿਆਂ ਅਨੁਸਾਰ ਤਮਿਲ ਉੱਚ ਪੱਧਰੀ

ਤਮਿਲ ਦੇ ਹੋਰ ਪੱਧਰ

ਪੱਕਾ ਨਹੀਂ ਕਿ ਇਹ ਤੁਹਾਡਾ ਪੱਧਰ ਹੈ?

ਛੋਟਾ ਪਲੇਸਮੈਂਟ ਟੈਸਟ ਦਿਓ ਅਤੇ ਅਸੀਂ ਸੁਝਾਵਾਂਗੇ ਕਿ ਕਿੱਥੋਂ ਸ਼ੁਰੂ ਕਰਨਾ ਹੈ।

ਪੱਧਰ ਟੈਸਟ ਦਿਓ

ਉੱਚ ਪੱਧਰੀ ’ਤੇ ਤਮਿਲ ਬਾਰੇ ਸਵਾਲ

ਤਮਿਲ ਵਿੱਚ ਉੱਚ ਪੱਧਰੀ ਪੱਧਰ ਕੀ ਹੈ?
Heylangs ’ਤੇ ਉੱਚ ਪੱਧਰੀ ਛੇ ਪੱਧਰਾਂ ਵਿੱਚੋਂ ਇੱਕ ਹੈ ਜੋ ਦੱਸਦੇ ਹਨ ਕਿ ਤੁਸੀਂ ਤਮਿਲ ਕਿੰਨੀ ਚੰਗੀ ਤਰ੍ਹਾਂ ਸੰਭਾਲ ਲੈਂਦੇ ਹੋ। ਗੁੰਝਲਦਾਰ, ਕੁਦਰਤੀ ਭਾਸ਼ਾ।
ਉੱਚ ਪੱਧਰੀ ਲਈ ਮੈਨੂੰ ਕਿੰਨੇ ਤਮਿਲ ਸ਼ਬਦ ਚਾਹੀਦੇ ਹਨ?
ਉੱਚ ਪੱਧਰੀ ਲਈ ਲਗਭਗ 8,000 ਸ਼ਬਦ ਇੱਕ ਚੰਗਾ ਟੀਚਾ ਹੈ। ਗਿਣਤੀ ਭਾਸ਼ਾ ਅਤੇ ਤੁਹਾਡੇ ਚੁਣੇ ਸ਼ਬਦਾਂ ’ਤੇ ਨਿਰਭਰ ਕਰਦੀ ਹੈ। ਸਭ ਤੋਂ ਵੱਧ ਆਉਣ ਵਾਲੇ ਸ਼ਬਦ ਪਹਿਲਾਂ ਸਿੱਖੋ।
ਤਮਿਲ ਉੱਚ ਪੱਧਰੀ ਤੱਕ ਪਹੁੰਚਣ ਵਿੱਚ ਕਿੰਨਾ ਸਮਾਂ ਲੱਗਦਾ ਹੈ?
ਕੁੱਲ ਲਗਭਗ 700–800 ਘੰਟੇ ਪੜ੍ਹਾਈ, ਇੱਕ ਅੰਗਰੇਜ਼ੀ ਬੋਲਣ ਵਾਲੇ ਲਈ ਜੋ ਔਸਤ ਔਖਾਈ ਵਾਲੀ ਭਾਸ਼ਾ ਸਿੱਖ ਰਿਹਾ ਹੈ। ਕਦੇ-ਕਦਾਈਂ ਲੰਮੇ ਸੈਸ਼ਨਾਂ ਨਾਲੋਂ ਆਪਣੇ ਪੱਧਰ ਦੀ ਸਮੱਗਰੀ ਨਾਲ ਰੋਜ਼ਾਨਾ ਛੋਟੇ ਸੈਸ਼ਨ ਵਧੀਆ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।