तामिल मा विज्ञान र प्रविधि
विज्ञान र प्रविधि: हाम्रो जीवन बदल्ने आविष्कार, उपकरण र विचार। सुरुवातकर्ता देखि निपुणता सम्मका आफ्नो स्तरमा तामिल पढ्नुहोस् र सुन्नुहोस्, अडियो, अनुवाद र क्विजसहित।
विज्ञान र प्रविधि सम्बन्धी तामिल पाठ
समाचार
सबै २ हेर्नुहोस्ஏழரை 01.09.2026
विज्ञान र प्रविधिप्रारम्भिकஎம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.படக்குழு விவரம்:எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.இறுதிக்கட்ட பணிகள்:இந்தப் படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
कथाहरू
सबै १२० हेर्नुहोस्संवादहरू
सबै १२० हेर्नुहोस्छोटो वक्तव्य
सबै १२० हेर्नुहोस्पोडकास्ट
सबै ४ हेर्नुहोस्विज्ञान र प्रविधि
சமூக ஊடகங்களும் நம் கவனமும்
கார்த்திக் ராமன் மற்றும் திவ்யா சங்கர் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் எப்படி நம் கவனத்தை ஈர்க்கின்றன என்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள். திரை நேரம் மற்றும் சமூக ஊடகங்களை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது பற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
विज्ञान र प्रविधि
நம்மை வளர்த்த திரைகள்
ஜொனாதன் ஹைட்டின் 'பதற்றத் தலைமுறை' நூல் முதல், ஊடகப் பீதியைச் சிக்கலாக்கும் கல்விசார் ஆய்வுகள் வரை, திரைகளும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் பற்றி ஆராய்ச்சிகள் உண்மையில் என்ன சொல்கின்றன என்பதைக் கார்த்திக்கையும் திவ்யாவும் ஆராய்கின்றனர். அறம் சார்ந்த உறுதிப்பாட்டையும் அறிவியல் சார்ந்த நுணுக்கத்தையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
विज्ञान र प्रविधि
அணியும் தொழில்நுட்பம்: நம்மை கவனிக்கும் கடிகாரங்கள்
கார்த்திக் மற்றும் திவ்யா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிட்னஸ் டிராக்கர் போன்ற அணியும் தொழில்நுட்பங்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் தினசரி வாழ்க்கையில் நடந்த படிகள், தூக்கம் மற்றும் இதயத் துடிப்பைக் கண்காணிப்பது பற்றிய கதைகளைப் பகிர்கிறார்கள்.


